ஐதராபாத்தில் அஜீத்: ’’வலிமை’’ படப்பிடிப்பில் நாளை பங்கேற்பு..

அஜீத் நடிக்க எச். விநோத் இயக்கும் புதிய படம்- ‘’வலிமை’’.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக, கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.

இந்த படத்தில் ‘’RX 100’’ படப்புகழ் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் சில நாட்கள் படமாக்கப்பட்டன.

அடுத்த கட்ட ஷுட்டிங் ,ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நாளை ஆரம்பமாகிறது.

ஷுட்டிங்கில் கலந்து கொள்ள அஜீத் ஐதராபாத் சென்றுள்ளார்.

நாளை தொடங்கும் படப்பிடிப்பில் அஜீத், வில்லன் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ச்சியாக சில வாரங்கள் வலிமை படப்பிடிப்பு நடக்கிறது.

நட்சத்திரங்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு ,கொரோனா, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-பா.பாரதி.