ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிந்தவுடன், அங்கிருந்து சென்னைக்கு பைக்கில் வந்த அஜித்….!

ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிந்தவுடன், அங்கிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்துள்ளார் அஜித்.

வலிமை படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கினார்கள்.

ஹைதராபாத் கடைசி நாள் படப்பிடிப்பில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளனர். காட்சிகள் படமாக்கி முடிந்தவுடன், “நான் சென்னைக்கு இந்த பைக்கிலேயே செல்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அஜித்.

இதை அறிந்த அவரது உதவியாளர்கள் பதறியடித்து, பின்னால் கிளம்பி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனாலும், இப்போதுதான் தெரியவந்தது.