ஜெயலலிதா நினைவிடத்தில் அஜீத் அ ஞ்சலி  

22

நடிகர் அஜீத்குமார், தற்போது  தல 57 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  கடந்த சில நாட்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை சென்னையில் காலமானார். இதை அறிந்த அஜீத், உடனியாக தனது அஞ்சிலி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் உடனே  இந்தியாவுக்கு கிளம்பினார்.

அவர் சென்னை வருவதற்குள் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டன.

சென்னை வந்த அஜீத் தனது மனைவி ஷாலினியுடன்,  மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று  அஞ்சலி செலுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published.