‘பைக் ரேஸ்’ காட்சியில் நடித்த போது அஜீத் காயம்-படப்பிடிப்பு நிறுத்தம்

ஸ்ரீதேவின் கணவர் போனிகபூர் தயாரிக்க, அஜீத் நடித்து வெளியான நேர்கொண்டபார்வை பெரிய வெற்றி பெற்றது. எச்.விநோத் இயக்கி இருந்தார்.

இந்த மூவர் கூட்டணி அடுத்த படத்திலும் இணைந்துள்ளது. படத்துக்கு வலிமை என்று பெயரிட்டு ஷுட்டிங் நடந்து வரும் நிலையில் அஜீத் கால்ஷீட் சொதப்பல் செய்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் இறக்கை கட்டி பறந்தது.

குட்டி விமானங்கள் இயக்குவதில் ஆர்வம் கொண்ட அஜீத் புதுவித விமானத்தை தயாரித்து வருவதால் அதற்கே நேரம் செலவிடுவதாகவும், படப்பிடிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டது.

விசாரணையில் வேறு மாதிரி தகவல் கிடைத்தது.படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பது உண்மைதான்.
ஆனால் காரணம் வேறு.

சென்னையில் அண்மையில் அஜீத் பங்கேற்ற பைக் ரேஸ் வலிமை படத்துக்காக படமாக்கப்பட்டுள்ளது. டூப் போடாமல் அஜீத் இந்த காட்சியில் நடித்த போது, பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் தோள் பட்டை மற்றும் கால்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

டாக்டரிடம் சிகிச்சை பெற்றுள்ள அஜீத் ஓய்வு எடுத்து வருவதால் ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.  ‘’அவர் குணம் ஆகி வந்ததும் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜீத்தின் குடும்ப டாக்டர் எப்போது அனுமதி தருவார் என்று காத்திருக்கிறது வலிமை பட டீம்