விமான நிலைய பாதுகாவலர்களை நலம் விசாரிக்கும் அஜித்குமார் : வைரலாகும் வீடியோ

தராபாத்

விமான நிலைய பாதுகாவலர்களை நலம் விசாரிக்கும் அஜித்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் ‘தலை’ என அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் எது செய்தாலும் அது சமூக வலை தளங்களில் பிரபலமாகி விடுகிறது.  அந்த அளவுக்கு அவருடைய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவி உள்ளதே இதற்குக் காரணமாகும்.  தற்போது போனிகபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடிக்க ஐதராபாத் நகருக்கு அஜித் சென்றுள்ளார்.

அஜித் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் பலராலும் பதியப்பட்டு வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அஜித் குமாருக்கு அங்குள்ள பாதுகாவலர்கள் சல்யூட் அடித்து வரவேற்கின்றனர்.

அஜித் அந்த பாதுகாவலர்களிடம் கை குலுக்கி அவர்களை நலம் விசாரித்து விட்டு செல்கிறார்.   வைரலாகும் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மிகவும் பாராட்டி  பின்னூட்டங்கள் இட்டு வருகின்றனர்.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ: