இணையதளத்தில் கசிந்த நேர்கொண்ட பார்வை புகைப்படம்….!
இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க , யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வித்யா பாலன் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின , இந்நிலையில் தற்போது வெறும் 10 நிமிடம் தான் வித்யா பாலனின் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படபிடிப்பு தளத்தில் ஒருவர் வித்யாபாலனுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. அஜித் – வித்யாபாலன் மாலையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சுவரில் இருப்பது போன்ற படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.