இணையத்தில் வைரலாகும் அஜித் குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்….!

நடிகர் அஜித் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவரை போலவே அவரது மகன், மகளும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர்.

அஜித் பெரும்பாலும் பொது இடங்களுக்கு வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார். இதையும் மீறி அவரது குடும்ப புகைப்படம் வெளியாகிவிடும்.

சமீபத்தில் தனது மகன் ஆத்விக் அஜித் பிறந்தநாளுக்காக ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் அஜித். அதில் ஷாலினி, அனோஷ்கா என குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் இப்போது அஜித் மகன் மற்றும் மகள் இருவரும் இருக்கும் ஒரு புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.