’விஸ்வாசம் வசூல் 130 கோடி ரூபாய்’’: தயாரிப்பாளர் மகிழ்ச்சி

ஜினிகாந்தின் ‘பேட்ட’படமும், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் வெளியானது.

வசூலில் யார் ஒசத்தி? என்பதில் ரஜினி ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே வலைத்தளங்களில் யுத்தமே நிகழ்ந்தது.

‘எங்கள் படம் தான் அதிக வசூல்’’ என இரு படங்களை தயாரித்த நிறுவனங்கள் மார் தட்டின.

உண்மை என்ன?

விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மனம் திறக்கிறார்.

‘’எனது சினிமா பயணத்தில்  விஸ்வாசம் படத்தின் வெற்றி மகத்தானது என்று கூறலாம்.அது-மிகப்பெரிய ‘பிளாக் பஸ்டர்’ படம்.இந்த பெருமை எல்லாம் அஜீத் உள்ளிட்ட படக்குழுவினரையே சேரும்.

தமிழ்நாட்டில் இந்த படம் சுமார் 600 திரையரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் மட்டும் இந்த படம் 130 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது. விநியோகஸ்தர் களுக்கு 75 கோடி ரூபாய் பங்கு கிடைத்துள்ளது.’’

இவ்வாறு தெரிவித்த தியாகராஜன் –மூன்றாம் பிறை படம் மூலம் திரை உலகில் நுழைந்தார்.

கிழக்குவாசல், பகல் நிலவு, இதயம், பார்த்திபன் கனவு எம் மகன் உள்ளிட்ட படங்களை தயாரித்த தியாகராஜன் –அடுத்து அதிரடியாக தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கிறார்.

5 கோடி ரூபாய் செலவில் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் திட்டமும்,தியாகராஜனுக்கு உள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி