வெளியானது!!! தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் – இரட்டை வேடத்தில் கெத்து காட்டும் அஜித்…

நடிகர் அஜித் நடிபபில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

viswasam

வீரம், வேதாளம், விவேகம் படத்துக்கு பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் விஸ்வாசம். இந்த பட தயாரிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதில் அஜித் இரு வேடத்தில் நடிப்பதாக தெரிய வருகிறது. வயதான தோற்றத்தில் தோன்றும் அஜித்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமைய்யா உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இமான் இசையில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி ஃப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் திருவிழா அன்று வெளியாகும் என படக்குழுவினர் உறுதி செய்தனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் இரு வேடத்தில் காட்சி அளிக்கிறார். வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் காட்சியாக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வயதான தோற்றத்தின் மும்பை படமும், இளமையான தோற்றத்தின் பின்னணியில் உள்ளூர் திருவிழா நடப்பது போன்றும் உள்ளது. நீண்ட இடைவேலைக்கு பிறகு சிவா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடிப்பது இதுவே முதல்முறை என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது ரசிகர்களின்.

இதற்கு முன்பு வாலில், சிட்டிசன், வில்லன், அட்டகாசம், வரலாறு, பில்லா, அசல் உள்ளிட்ட படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.