இந்தியளவில் ட்விட்டரில் நம்பர் 1 இடம் பிடித்த அஜித்தின் விஸ்வாசம்….!

ஒரே வருடத்தில் இரு வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அஜித் .

அதோடு, இந்தியளவிலும், அந்தப் படம் தற்போது நம்பர் 1 இடம் பிடித்துள்ளது . விஸ்வாசம் படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் 5 இடங்களை பிடித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் – இயக்குனர் சிவா கூட்டணியில் வெளியான விஸ்வாசம். உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், 2019ம் ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் ட்ரெண்டான ஹாஷ்டேக்கில், விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளது. 2019ம் ஆண்டின் 2ம் பாதியில் நேர்கொண்ட பார்வை படம் தான் முதலிடம் பிடித்துள்ளது.

டாப் ஹாஷ்டேக் பட்டியலில் விஸ்வாசம் படத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த அஜித் சாரின் அனைத்து ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா நண்பர்களுக்கும் நன்றி என விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி