‘யு’ சென்சார் சான்றிதழ் பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’

சென்னை:

பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதிபிலிம்ஸ் அறிவித்து உள்ளது.

மதுரை பின்னணியில் உருவாகி உள்ள அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தணிக்கைத்துறை ‘யு’ சான்றிதழ் வழங்கி படத்தை திரையிட அனுமதி வழங்கி உள்ளது.

விஸ்வாசம் படத்தில்  தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் அஜித்  நடித்துள்ளார். அவருடன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும்  நடிகர்கள்  விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை வெற்றிப்பட இயக்குனர் சிவா இயக்கி உள்ளார். படத்திற்கு டிஇமான்  இசை அமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஸ்வாசம் படத்தின் டீசர் நாளை  வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ‘

You may have missed