விவேகம் பட ரிலீஸ் : களை கட்டும் திரையரங்குகள்

ஜித் குமார் நடிக்கும் விவேகம் படம் ஆகஸ்ட் 24 வெளிவருவதையொட்டி முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு திரையரங்குகள் களை கட்டியுள்ளன.

தமிழ்த்திரையுலகில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிக்கும் விவேக் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது.   அனைத்து திரையரங்குகளிலும் இன்றுமுதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.    சென்னையில் தேவி, அண்ணா ஆகிய திரையரங்குகளில் மட்டும் முன்பதிவு தொடங்கியுள்ளது.

அக்ஷரா ஹாசன்

முதல் நான்கு நாட்களுக்கு திரையரங்குகள் நிரம்பும் எனவும்,  அஜித் நடித்த முந்தைய படங்களின் சாதனையை விவேகம் முறியடிக்கும் எனவும் ரசிகர்களிடையே பேசப் படுகிறது.   முக்கியமாக மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் அனைத்து தியேட்டர்களிலும் விவேகம் வெளியாக உள்ளதால் வசூல் விவரம் அறிய தமிழ்த் திரையுலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

சிவாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித்குமாருடன் காஜல் அகர்வால்,  அக்ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  விவேக் ஓபராய்க்கு இதுவே முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.   இசை அனிருத் அமைக்க, இந்த படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.