ன்று காலை அஜித்தின் விவேகம் படம் வெளியானது.

சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் மொத்தம் நூறுகோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் படம் வெளியாக இருந்த சில மணி நேரத்துக்கு முன்பே.. அதாவது நேற்று நள்ளிரவே சில இணையதளங்களில் இந்தத் திரைப்படம் முழுமையாக வெளியாகிவிட்டது.

இதையடுத்து பலர் இந்தப் படத்தை டவுன்லோடு செய்து கண்டு களித்து வருகிறார்கள்.

சிலர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், இப்படத்தின் காட்சிகளை துண்டுத் துண்டாக, நேரலையில் பதிவிட்டு வருகிறார்கள்.

இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.