தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி குடுக்கும் அஜ்மல்….!

கே. வி. ஆனந்த் இயக்கிய ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் அதன்பின் தமிழில் பெரும் வரவேற்பு இல்லாததால் மலையாளப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில் மீண்டும் கதாநாயகனாக ஒரு தமிழ் படத்தில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். ‘செகண்ட் ஷோ’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை டார்க் ரூம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.டி.ஞானம் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் அஜ்மலுடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிக விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

You may have missed