‘நெற்றிக்கண்’ படத்தில் இணையும் அஜ்மல்…..!

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘ப்ளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் மிலிந்த் ராவ் இயக்க, நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘நெற்றிக்கண்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்..

இந்தியிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுகிறது. முக்கிய பாத்திரத்தில் சோனம் கபூர் நடிக்கிறார். ஷோமி மகிஜா இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றுக்காக அஜ்மல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

’பிப்ரவரி 14’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜ்மல்.பல தமிழ்ப் படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்தவர், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.