டில்லி:

த்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவ ராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். வேறு ஒருவரை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி நதி நீர் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில்,கர்நாடகம்,  தமிழகம், புதுவை, கேரளா ஆகிய  மாநிலங்களுக்கு இடையே உள்ள  காவிரி நீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில்,  காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை த்திய அரசு அமைத்தது.

இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையர் இருந்து வருகிறார்கள். ஏற்கனவே மசூத் ஹூசைன் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.. இதையடுத்து, அந்த பதவிக்கு சின்ஹா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை  ஆணையத்துக்கு  புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு, தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள  ஏ.கே.சின்ஹாவையே காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தர விட்டுள்ளது.