அமிர்தசரஸ்:

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், பாஜக அகாலிதளம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, அங்கு அகாலிதளம் 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் போட்டியிடுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மற்றொரு புறம்  போர் பதற்றமும் நிலவி வருகிறது. இந்த நிலையில், பாரதியஜனதா கட்சி, தனது அரசியல் பணிகளை தீவிரமாகவே செய்து வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அகாலிதளம் கட்சியுடன் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதில், இரு அணியினரிடையே உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 13 லோக்சபா தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் அகாலிதளம் கட்சிக்கு 10 இடங்களும், பாஜகவுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.