பலசோர்,

‘ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் நேற்று ஆகாஷ் ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றிபெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவில் உள்ள  ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ‘ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஆளில்லாத குட்டி விமானத்தை வானில் இலக்காக வைத்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டி.ஆர்.டி.ஓ.) நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் ஏவுகணை  25 கி.மீ. தூரம் வரை  வானில் உள்ள இலக்கை தாக்க வல்லது.  ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று வானில் உள்ள பல்வேறு இலக்குகளை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவம், சுமார்  55 கிலோ  எடை கொண்ட ஆயுதங்களை இந்த ஏவுகணையில்  பொருத்தி தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

 

இந்த சோதனையை  ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி நேரில் பார்வையிட்டார்.