மகாராணா பிரதாப் அளவு அக்பர் பேரசரர் இல்லை : யோகி ஆதித்யநாத்

க்னோ

காராணா பிரதாப் அளவுக்கு அக்பர் பேரசர் இல்லை என உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர்கள் அடிக்கடி ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது வழக்கமாகி வருகிறது.   உ. பி. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாஜ்மகால் பெயரை ராம் மகால், கிருஷ்ண மகால் போன்ற பெயர்களால் மாற்றப் படவேண்டும் என தெரிவித்த சர்ச்சை முடிவதற்குள் முதல்வர் யோகி அடுத்த சர்ச்சையை ஆரம்பித்துள்ளார்.

லக்னோ நகரில் ஒரு நிகழ்வில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “பேரசரர் என கூறும் அளவுக்கு மகாராணா பிரதாப் அளவுக்கு அக்பருக்கு தகுதி இல்லை.   ஒரு போதும் தனது சுயமரியாதையில் சமரசம் செய்துக் கொள்ளாத மகாராணா பிரதாப் தான் பேரசர் பட்டத்துகு பொறுத்தமானவர்.

இந்தியாவின் மிகச் சிறந்த அரசரான அவர் அக்பரின் தூதுக்குழுவிடம் தாம் ஒரு போதும் வெளிநாட்டவரையோ, இந்து அல்லாத ஒருவரையோ பேரசராக ஏற்க மாட்டேன் என துணிச்சலுடன் தெரிவித்தார்.  வரலாற்றை சிதைத்து தவறாக வழிகட்டும் இந்த சமுதாயத்தினால் வலுவான எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்க இயலாது.

மக்கள் மகாராணாவின் வாழ்க்கை வரலாறு, வீரம் ஆகியவற்றைக் கொண்டு ஊக்கம் பெற வேண்டும்” என உரையாற்றி உள்ளார்.   முதல்வரின் இந்தப் பேச்சு மாநிலம் எங்கும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  சமூக வலைதளங்களில் இந்தப் பேச்சை தொடர்ந்து கடுமையான விவாதம் நடந்து வருகிறது.