யோகியின் பிரயாக்ராஜ் நகரில் 3 மாத திருமண தடை உத்தரவுக்கு சாதுக்கள் அமைப்பு எதிர்ப்பு

க்னோ

த்திரப் பிரதேச அரசின் பிரயாக்ராஜ் நகரில் 3 மாத திருமண தடை சட்டத்துக்கு சாதுக்கள் அமைப்பான அகதா பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகர் ஒரு புண்ணிய தலமாகும். இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கின்றன. அதனால் இந்து புனித நீராடுவது இந்துக்களின் வழக்கமாகும். அடுத்த 2019 ஆம் வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை உத்திரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்ப மேளா நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகரில் கூடி புனித நீராடுவார்கள்.

அப்போது நகரில் ஜன நெரிசல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உத்திரப் பிரதேச அரசு ஜனவரி மாதம் கும்ப மேளா தொடங்கும் முதல் நாளில் இருந்து மார்ச் மாதம் கும்பமேளா முடியும் அடுத்த தினம் வரை பிரயாக்ராஜ் நகரில் திருமணக்கள் நடத்த தடை விதித்துள்ளது. ஏற்கனவே திருமண தேதிகள் குறித்து விட்டு திருமண ஏற்பாடுகள் செய்துள்ள பலரும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்து சாதுக்கள் அமைப்பான அகில இந்திய அகதா பரிஷத் இதை கடுமையாக எதிர்த்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி, “இவ்வாறு மூன்று மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்துள்ளது தவறான நடவடிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே அரசு இந்த உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே பலர் திருமண மண்டபங்களை பதிவு செய்துள்ளனர். ஆகவே அவர்களுக்கு பண இழப்பு உள்ளிட்ட எதுவும் நேராதபடி அரசு திருமணங்கள் நடத்த விதித்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.