போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ‘அகண்டா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

இது பாலகிருஷ்ணா நடிக்கும் 106-வது படமாகும். இப்படத்தை மிர்யாலா ரவீந்தர் ரெட்டியின் துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘அகண்டா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீஸர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.