கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் சில சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்தத் தொடரில் அகிலா என்ற வேடத்தில் நடித்திருந்த மெர்சீனா நீனு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CClYpy7prYC/
அதில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையினால் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும், இதன் காரணமாக தன்னால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு பதிலாக அந்த சீரியலில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.