மக்களை முட்டாளாக்குவதில் கைதேர்ந்த கட்சி பா..ஜ.க: அகிலேஷ்

கோல்கட்டா:

பா.ஜ.க மக்களை முட்டாளாக்குவதில் கைதேர்ந்த ஒரு கட்சி என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் உ.பி.யின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மாநில மாநாடு நடை பெற்றது.  முன்னாள் உ பி முதல்வர் அகிலேஷ் யாதவ் இதில் கலந்துக் கொண்டார்.  அவர் அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

 

அப்போது அவர், “மதச் சார்பற்ற கட்சியகள் யாவும் பா ஜ க வுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.  வரும் 2019ல் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய அளவில் வளரும்.  பாஜக மக்களை முட்டாளாக்குவதில் ஒரு கைதேர்ந்த கட்சியாக விளங்குகிறது” என கூறி உள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை அகிலேஷ் யாதவ் சந்தித்தார். அகிலேஷ் யாதவ் இது குறித்து, ” நான் மேற்குவங்க மாநிலத்தில் கோல்கட்டா வரும் போது மம்தா பானர்ஜியை சந்திப்பது என் வழக்கம். திரிணாமுல் கட்சிக்கு பா.ஜ.வை எதிர்ப்பதில் எங்கள் சமாஜ்வாதி கட்சி என்றும் ஆதரவு தரும் என்றார்.

 

You may have missed