மனைவியின் தொகுதியில் போட்டியிட உள்ள அகிலேஷ் யாதவ்

                                                          டிம்பிள் யாதவ் – அகிலேஷ் யாதவ்

க்னோ

டைபெற உள்ள 2019 மக்களவை தேர்தலில் தனது மனைவியின் தொகுதியில் இருந்து தாம் போட்டியிட உள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டே உள்ள நிலையி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளன.   சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் தனது கட்சியின் தொண்டர்கள் கூட்டம் ஒன்றை நிகழ்த்தினார்.

அப்போது அவர் “நமது தலைவர் முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதியில் இருந்து போட்டி இடுகிறார்.   நான் எனது மனைவி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனோஜ் தொகுதியில் இருந்து போட்டி இட உள்ளேன்.

எதிர்க்கட்சியினர் நமது கட்சியில் எனது குடும்பத்தினர் ஆதிக்கம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.   அதனால் எனது மனைவி டிம்பிள் யாதவ் வரும் தேர்தலில் போட்டி இட மாட்டார்.  அவர் தொகுதியில் நான் போட்டி இடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.