‘இடியட்’ படத்தில் அக்‌ஷரா கவுடா கொண்ட கேரக்டர் லுக் போஸ்டர் வெளியீடு….!

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா.

கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அக்‌ஷரா.

இந்நிலையில் இடியட் படத்தில் அக்‌ஷரா கவுடா கொண்ட கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சூனியக்காரியாக ஸ்டைலிஷ் தமிழச்சி என்று புகழாரம் சூட்டி ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்கி வருகிறார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு மாதம் முன்பு வெளியானது.