‘துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படும் அக்‌ஷரா கவுடா…..!

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’.

இந்தப் படத்தில் அக்‌ஷரா கவுடா சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் அளித்த நேரலைப் பேட்டியில்,

‘துப்பாக்கி’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அதற்கு சந்தோஷ் சிவன் சார்தான் ஒளிப்பதிவாளர். அந்தச் சமயத்தில் இந்தியில் ‘நாடோடிகள்’ ரீமேக் படப்பிடிப்பும் இருந்தது. அதற்கும் சந்தோஷ் சிவன்தான் ஒளிப்பதிவாளர். அப்போதுதான் ‘துப்பாக்கி’ காட்சி குறித்து தெரிவித்து 2 மணி நேரம்தான் படப்பிடிப்பு என்று நடிக்க அழைத்தார் சந்தோஷ் சிவன்.

விஜய் சார்- ஏ.ஆர்.முருகதாஸ் சார் – சந்தோஷ் சிவன் சார் ஆகியோருக்காக மட்டுமே நடித்தேன். அதைத் தாண்டி அப்படி என்ன பெரிய கதாபாத்திரத்தில் நான் நடித்துவிட்டேன். அதில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார் .