ஸ்கிரிப்ட் ரைட்டராக மாறிய நடிகை அக்ஷரா கவுடா….!

கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர்.

சினிமா நட்சத்திரங்களும் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே பொழுதை கழிக்கின்றனர் .

இந்நிலையில் பிரபல நடிகை அக்ஷரா கவுடா தான் ஸ்கிரிப்ட் எழுத துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். “பிலிம் மேக்கிங் கோர்ஸில் கற்றுக்கொண்ட மொத்தத்தையம் பயன்படுத்தி தற்போது ஸ்கிரிப்ட் எழுத துவங்கியுள்ளேன். குவாரன்டைன் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துகிறேன். இது எதுவரை செல்கிறது என பார்ப்போம்” என அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

அக்ஷரா கவுடா விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.