அக்ஷரா ஹாசனின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ டீசர் ரிலீஸ்….!

நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப் இசை பாடகி உஷா உதூப் அக்‌ஷராவின் பாட்டியாக நடிக்கிறார்.

ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன், உஷா உதூப்ப்புடன் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ஷ்ரேயா தேவ் ட்யூப், எடிட்டராக கீர்த்தனா முரளி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார் .

இந்நிலையில் இப்பாத்தின் டீசர் வெளியாகியுள்ளது .

teaser of #AMNP is here and it’s super intriguing” என ஸ்ருதி ஹாசன் அது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

You may have missed