திறமையான நடிகர் … கடவுள் அவரது குடும்பத்திற்கு பலம் அளிக்கட்டும் : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் இவர் டோனியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது “Dil Bechara” என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ” இந்த செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது, பேச்சில்லாமல் போய்விட்டது … சிச்சோரில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நடிப்பை பார்த்ததும் அதன் தயாரிப்பாளரான எனது நண்பர் சஜித் அவர்களிடம் நான் படத்தை எவ்வளவு ரசித்தேன், அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று சொன்னதும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. திறமையான நடிகர் … கடவுள் அவரது குடும்பத்திற்கு பலம் அளிக்கட்டும். ” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .