இந்து அமைப்பின் எதிர்ப்பால் ‘லட்சுமி பாம்’ படத்தின் பெயரை மாற்றிய அக்‌ஷய் குமார்.

இந்து அமைப்பின் எதிர்ப்பால் ‘லட்சுமி பாம்’ படத்தின் பெயரை மாற்றிய அக்‌ஷய் குமார்.

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி பெரும் வெற்றி பெற்ற ’’காஞ்சனா’’ திரைப்படத்தை அவர், ’’LAXMMI BOMB’’ என்ற பெயரில்  இந்தியில் இயக்கியுள்ளார்.

அக்‌ஷய் குமார்- ஹியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தின் பெயர் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண் படுத்துவதாக கர்னி சேனா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர்கள் ஷபான் கான், துஷார் கபூர் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தது.

‘’இந்துக்கள் வழிபடும் தெய்வத்தின் பெயரை வேண்டுமென்றே கொச்சைப் படுத்தி உங்கள் படத்துக்குப் பெயர் வைத்துள்ளீர்கள். அந்த டைட்டிலை மாற்ற வேண்டும். தவிர, அப்படிப் பெயர் சூட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கதாநாயகன் அக்‌ஷய் குமாருடன் ஆலோசித்து படத்தில் பெயரை  ‘LAXMII’’. என்று படத் தயாரிப்பாளர்கள் மாற்றி விட்டனர்.

இதனிடையே ஆன்லைனில் வெளியான இந்த படத்தின் முன்னோட்டத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதாக மும்பை சினிமா  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பா.பாரதி.