தனுஷ் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார்…!

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி படுதோல்வியைச் சந்தித்த ‘ஜீரோ’ படத்திற்கு பின் அதிலிருந்து மீண்டு வர புதிய கதையொன்றை எழுதி வருகிறார் ஆனந்த் எல்.ராய்.

இந்த படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், இந்தியில் தனுஷ் அறிமுகமான படம் ‘ராஞ்ஹானா (Raanjhanaa)’. இப்படத்தின் மூலம் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.

இந்தக் கதையில் நாயகியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளதாகவும், கவுரவ கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.