உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன் படி 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

87.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டி டுவேன் ஜான்ஸன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

71.5 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி ‘டெட்பூல்’ படத்தில் நடித்த ரயான் ரெனால்ட்ஸ் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மார்க் வால்பெர்க் மூன்றாம் இடத்திலும், பேட்மேனாக நடித்த பென் அஃப்லெக் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் , கிட்டத்தட்ட 366 கோடி ரூபாயை ஈட்டி ஆறாம் இடத்தை அக்‌ஷய் குமார் பிடித்துள்ளார். வில் ஸ்மித், ஜாக்கி சான் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

2020ஆம் ஆண்டு உலகளவில் அதிக சம்பளம் பெறும் பிரபலங்கள்:

1.டுவேன் ஜான்ஸன் – $87.5 மில்லியன்

2. ரயான் ரெனால்ட்ஸ் – $71.5 மில்லியன்

3. மார்க் வால்பெர்க் – $58 மில்லியன்

4. பென் அஃப்லெக் – $55 மில்லியன்

5. வின் டீசல் – $54 மில்லியன்

6. அக்‌ஷய் குமார் – $48.5 மில்லியன்

7. லின் – மேனுவல் மிராண்டா – $45.5 மில்லியன்

8. வில் ஸ்மித் – $44.5 மில்லியன்

9. ஆடம் சாண்ட்லர் – $41 மில்லியன்

10. ஜாக்கி சான் – $40 மில்லியன்