தாஜ்மஹாலில் அக்ஷய் குமார்…
அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான் நடிக்கும் புதிய இந்திப்படமான ‘அட்ராங்கி ரே’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாரா அலிகான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
ஊரடங்கு காரணமாக எட்டு மாதங்கள் முடங்கி கிடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
மதுரை மற்றும் டெல்லியில் தனுஷ் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நடந்து வருகிறது.
அக்ஷய் குமார்- சாரா அலிகான் ஆகிய இருவரும் ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
தாஜ்மஹால் பின்னணியில் ஷாஜஹான் வேடத்தில் கையில் ரோஜா மலருடன் அக்ஷய் குமார், தோன்றும் புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. (தாஜ்மஹாலை கட்டியவர் ஷாஜஹான்)
வரும் 29 ஆம் தேதியுடன் இந்த படத்தின் ஷுட்டிங் முடிகிறது. காதலை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘அட்ராங்கி ரே’ காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.
– பா. பாரதி