இந்தியில் ‘’ரீ-மேக்’’ செய்யப்படும் வீரம் : அஜீத் வேடத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமாருக்கு இரு கதாநாயகிகள்..

 

அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘வீரம்’ படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளார், சாஜித் நாடியாட்வாலா.

இந்தி படத்துக்கு ‘பச்சன் பாண்டே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹீரோவாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

ஏற்கனவே கிருதி சானோன் என்ற நடிகை, அக்‌ஷய் குமார் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டசும் இன்னொரு கதாநாயகியாக இப்போது நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் – அக்‌ஷய் குமார் – கிருதி சானோன்

கிருதி சானோன், பத்திரிகையாளராக நடிப்பதாக படக்குழு தெரிவித்த நிலையில், ஜாக்குலினுக்கு என்ன வேடம் என தெரியவில்லை.

“இந்த படத்தில் நான் புதிய அவதாரம் எடுக்கிறேன்” என ஜாக்குலின் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும், கேரக்டர் குறித்து விளக்கமாக எதுவும் குறிப்பிடவில்லை.

அக்‌ஷய்குமாருடன், ஜாக்குலின் ஏற்கனவே ஹவுஸ்புல், பிரதர்ஸ் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ‘பச்சன் பாண்டே’ படப்பிடிப்பு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

தொடர்ச்சியாக அங்கேயே 60 நாட்கள் ஷுட்டிங் நடத்தி முழுப்படத்தையும் ஒரே மூச்சில் முடிக்க, இந்த படத்தின் இயக்குநர் பர்கத் சாம்ஜி திட்டமிட்டுள்ளார்.

– பா. பாரதி

 

You may have missed