உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் ஆண்டு வருமானத்தை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு சினிமா மற்றும் டி.வி. துறையில் அதிக வருமானம் ஈட்டிய நூறு பேரின் பெயர் பட்டியலை ‘போர்ப்ஸ்’ வெளியிட்டுள்ளது.

முதல் இடத்தை டி.வி. ரியாலிட்டி ஷோ நடிகை கெய்லி கென்னர் பிடித்துள்ளார். நடப்பு ஆண்டில் (2020) அவரது வருமானம் 590 மில்லியன் டாலர்.

இந்தி நடிகர் அக்ஷய் குமார் 52 வது இடத்தில் உள்ளார். அவரது ஆண்டு வருமானம் – 48. 5 மில்லியன் டாலர். அதாவது இந்திய பணத்தில் அக்‌ஷய் குமார் இந்த ஆண்டு 356 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

‘போர்ப்ஸ் 100’ பட்டியலில் இந்த ஆண்டு இடம் பிடித்த ஒரே இந்திய நட்சத்திரம் அக்‌ஷய் குமார் மட்டுமே.

இவரது சக நடிகர்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களை மட்டுமே கொடுக்கும் நிலையில் அக்‌ஷய் குமார் ஆண்டுக்கு ஐந்து சினிமாக்களையாவது கொடுத்து விடுகிறார்.

கடந்த ஆண்டில் அவர், கேசரி, மிஷன் மங்கள், ஹவுஸ் புல்- 4, குட் நியூஸ் ஆகிய நான்கு படங்களை அளித்திருந்தார். அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள்.

இந்த ஆண்டில் ஆறு படங்களை அக்‌ஷய் குமார் கைவசம் வைத்துள்ளார்.

– பா. பாரதி