டைரக்டர் சஜித்கான் மீது #MeToo புகார் எதிரொலி: ஷூட்டிங்கை நிறுத்திய அக்‌ஷய் குமார்!

டில்லி:

பாலிவுட் டைரக்டர் சஜித்கான் மீது #MeToo புகார் கூறப்பட்ட நிலையில், அவரின் இயக்கத்தில் நடித்து வந்த நடிகர் அக்ஷய் குமார் தனது நடிப்புலக 28 ஆண்டில் முதன்முறையாக  ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு வெளியேறினார்.

#Me Too என்ற ஹாஸ்டேக்கில் வெளியாகி வரும் பாலியல் புகார்கள் குறித்த பதிவுகள் நாடு முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் இதன் முலம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மெரிக்காவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து, அம்பலப்படுத்தும் நோக்கில் சமூக வலைதளமான டிவிட்டரில் தொடங்கப்பட்டது   #மீ டூ  (நானும் பாதிக்கப்பட்டேன் /  #MeToo) எனப்படும் ஹேஸ்டேக்.

தற்போது இந்த மீ டூ  ஹேஸ்டேக் உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் சமீப நாட்களாக இந்த ஹேஸ்டேக்கில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் பதிவிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி  வருகின்றன.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீதத்தா, பிரபல பாலிவுட்நடிகர் நானே படேகர் மீது பாலியல் புகார் பரபரப்பை தொடங்கினார். அதைத்தொடர்ந்து,  மத்திய அமைச்சர்  அக்பர்மீது புகார் பதிவாகி புயலை கிளப்பியது.

இந்த நிலையில், மீ டூ காரணமாக, பிரபல பாலிவுட் நடிகரான  அக்‌ஷய் குமார் தனது 28 வருட சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக   தன் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளார்.  தற்போது சஜித் கான் (Sajid Khan) இயக்கத்தில் ஹவுஸ்ஃபுல் 4 (Housefull 4) என்ற படத்தில் நடித்து வரும் நிலையில்,  டைரக்டர் சஜீத்கான் மீது #MeToo-வில் சில பெண்கள் பாலியல் புகார்கள் பதிவிட்ட நிலையில், இத்தாலியில் நடைபெற்று வந்த த தனது பட ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். இந்த படத்தில் அக்ஷய் குமாருடன் பிரபல நடிகர் நானா படேகரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may have missed