மும்பை:
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

53 வயதான நடிகர் அக்சய் குமார், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மிக விரைவில் மீண்டும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.