அட்சய திருதியை: தங்கத்தை சேமியுங்கள்!

சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும். மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் ‘‘அட்சய திருதியை’’ என்று அழைக்கப்படுகிறது.

அட்சய திருதியை அன்று நாம் செய்கின்ற எந்தவொரு நற்காரியமும், செயலும் பன்மடங்கு பெருகி நம் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதே உண்மை.

நேற்றும், இன்றும் அட்சய திருதியை நாட்கள் என சொல்லப்படுகிறது.  ‘‘அட்சயம்’’ என்றால் என்றென்றும் வளர்வது, பூரணமானது குறையாதது, அழியா பலன் தருவது என்று பொருள்.

இரு கிரகங்களின் அம்சமாக தங்கம் மற்றும் வெள்ளி உள்ளது. மஞ்சள் நிறமான தங்கம் குருவினையும், வெள்ளியானது சுக்கிரணையும் குறிப்பிடுகிறது.

எனவே தங்கம் வாங்க விரும்புவோர் சுக்கிர ஹோரைகளில் வாங்குவது நலம்.

குபேரன், தான் இழந்த செல்வங்களை திரும்ப பெற்ற நாளே அட்சய திருதியை நாள் என்றும் கூறப்படுகிறது. கிருஷ்ண பகவானுக்கு அவல் கொடுத்து, மீண்டும் குபேரனான நன்னாளும் இதுவென்றும் காணப்படுகிறது.

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளான அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் நிறைய சேரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதனால் அட்சய திருதியை நாளில் சிறிய நகையாவது வாங்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகின்றனர்.

அதன்படி தங்கம் வாங்குவதற்கு உகந்த தினமாகவும், பொன்னான நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. இன்றைய தினத்தில் சாமி படங்கள், உணவு தானியங்கள், பாத்திரம், சர்க்கரை, உப்பு, மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களும் வாங்கலாம்.

காலையில் குளித்து கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி வரவும் பிறகு வீட்டில் தயிர் சாதம் செய்து அதனுடன் நெல்லிக்காயை நறுக்கி கலந்து விடவும் பிறகு குருமிளகு நிறைய கலந்த உளுந்து வடை தயார் செய்து மூன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.

அடுத்த அட்சய திருதியை அன்று நமது தரித்திரங்கள் தீர்ந்து நமது வாழ்க்கை மென் மேலும் உயர்ந்து கொண்டே போகும் இதை தவறாமல் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

அட்சய திருதியை அன்று நகை வாங்க வேண்டும் என்று எந்த ஏடுகளிலோ, புராணக்கதைகளிளோ, சித்தர்கள் அல்லது வேறு புத்தகங்களிளோ எதிலும் குறிப்பிட படவில்லை

இன்று அன்னதானம் செய்வதும் நல்லது.