அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் கிளைகளுக்கு தடை…மத்திய அரசு

டில்லி:

அல்கொய்தா அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்.கே ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அகியுஸ் அண்டைய நாடுகளில் பல பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இந்திய துணை கண்டத்தில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது. பயங்கரவாத செயல்களுக்கு இந்திய இளைஞர்களை வழிநடத்தவும், சேர்க்கவும் முயற்சி செய்கிறது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ்–கே அமைப்பும் இதேபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.