இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆண் குழந்தைக்கு அப்பாவானார்…..!

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலுடன் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது.

ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலால் சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் விஜய் திருமணம் செய்தார்

இந்நிலையில் விஜய் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இன்று (30.05.20) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.