அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’. கிட்டத்தட்ட ரூ.250 கோடி வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்க இந்தப் படம் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், சிவகார்த்திகேயனும் இதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படக்குழுவினர் இதும் வெறும் வதந்தி என கூறியுள்ளனர் .