முகவரியை தொலைத்த அழகிரி : அதிமுக அமைச்சர் உதயகுமார்

துரை

மு க அழகிரி திமுகவில் தனது முகவரியை தொலைத்து விட்டார் என தமிழக அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

தமிழக அமைச்சர் உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “முன்னாள் முதல்வரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு க அழகிரி தற்போது முகவரியை தொலைத்துள்ளார்.   அவருக்கு திமுகவில் கதவடைக்கப்பட்டுள்ளது.

அதை திறக்கும் விதமாகவும் தனது முகவரியை தேடும் விதமாகவும் அழகிரி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.    முன்பு அழகிரி 2011க்கு பிறகு அதிமுக இருக்காது என சொன்னார்.   ஆனால் அவர் இப்போது திமுகவிலேயே இல்லாமல் போய் விட்டார்.  அழகிரியின் திருமங்கலம் ஃபார்முலாவும் காணாமல் போய் விட்டது.” என தெரிவித்தார்.