கருணாநிதி – மு.க.அழகிரி திடீர் சந்திப்பு !

சென்னை:

டல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி இன்று சந்தித்தார்.

alagiri-dmk-karunanidhi_0_0_0

கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை இன்று மாலை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கோபாலபுரம் இல்லம் வந்த போதெல்லாம், தனது தாயார் தயாளு அம்மாவை மட்டும் சந்தித்து சென்ற அழகிரி, நீண்ட நாட்களுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அழகிரி மகன் துரை தயாநிதியும் உடனிருந்தார்.

கார்ட்டூன் கேலரி