Random image

மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க அழகிரி முயற்சி….ஆட்சியருக்கு கடிதம்

மதுரை:

மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி அழகிரி ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி மறைவை தொடர்ந்து திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். ஸ்டாலினுக்கு எதிராக மு.க அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ளார். கடந்த 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி ஒன்று நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைதொடர்ந்து மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க அழகிரி முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘‘மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் அழகிரி தெரிவித்துள்ளார்.