சென்னையில் எஸ்.ஐக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

சென்னை:

சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலைவ காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் எஸ்ஐ இவர் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பாரிமுனை பகுதியில் ஊரடங்கு உத்தரவால் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தார்.இந்த நிலையில் இவருக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை அறிய ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 9.30 மணிக்கு தமிழக சுகாதார துறை அதிகாரிகள் அந்த எஸ்ஐயை 108 ஆம்புலன்சில் மூலமாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முன்னதாக புதுப்பேட்டையைச் சேர்ந்த பெண் காவலர் மற்றும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காரணமாக தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.