மதிய உணவின் தரத்தை சோதித்த மாவட்ட ஆட்சியர்

லப்புழை

லப்புழையில் உள்ள பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார்.

ஆலப்புழை நகரில் உள்ள பள்ளிகளில் ஒன்று ஸ்ரீதேவி விலாசம் அரசினர் பள்ளி.   ஆலப்புழை நகரில்  இந்தப் பள்ளி அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உள்ளது.   இங்கு அரசின் சார்பில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திடீர் சோதனை நடத்தி உள்ளார்.   அந்தப் பள்ளி மாணவர்களின் இடையே தானும் அமர்ந்து  உணவு அருந்தி உள்ளார்.    அவருடன் முன்னாள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி லலிதாவும் சென்றுள்ளார்.

ஆட்சியர் சுகாஸ், அந்த உணவு வகைகள் நன்கு உள்ளதாக தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.   அத்துடன்  அந்த உணவு வகைகளில் மோர், வெள்ளரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வருவல் ஆகியவை மிகவும் சுவையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.   அந்தப் பள்ளியில் நூலகம் மற்றும் கம்பியூட்டர் லாபரட்டரியையும் அவர் பார்வை இட்டுள்ளார்.

சுகாஸின் இந்தப் பதிவு கேரள மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது.   இந்தப் பதிவை சுமார் 3500 பேர் ஷேர் செய்து வைரலாகி உள்ளது.   அத்துடன் சுகாஸ் தாம் மாணவர்களுடன் உணவருந்திய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.