சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று….

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் நீதித்துறையின் கீழ் இயங்கும் அபெக்ஸ் கோட்டில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு ரிஜிஸ்டரர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பணியாளருக்கு கடந்த 16-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் அந்த பணியாளருடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்றது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்டில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அபெக்ஸ் கோர்ட் கடந்த 23-ஆம் தேதி முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி கொண்டதுடன், மிகவும் அவசரமான வழக்குகள் மட்டும் வீடியோ கான்பிரன்சிங்கில் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கார்ட்டூன் கேலரி