அலாஸ்கா : நில நடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை நீக்கம்

--

ன்கரேஜ், அலாஸ்கா

லாஸ்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடபட்டு பின் நீக்கப்பட்டது.

அலாஸ்காவில் ஆன்கரேஜ் பகுதியில் அடுத்தடுத்து இரு கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் 7.0 மற்றும் 5.7 ஆக பதிவானது. ஆன்கரேஜ் நகரம் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமாகும். இங்கு சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்த மக்கள் அனைவரும் இந்த நில நடுக்கத்தால் கடும் பீதி அடைந்து தாங்கள் இருந்த கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்து சாலையில் நின்றுக் கொண்டனர்.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பல கட்டிடங்கள் தூள் தூளாக ஒரே நொடியில் இடிந்து விழுந்தன. அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. விமான நிலையம் மூடபட்டது. மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த கடும் நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சிறிது நேரத்துக்குள் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.