ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.19.74 கோடிக்கு ஏலம்

இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய ’கடவுளின் கடிதம்’ என்ற கடிதம் ரூ.19.74 கோடிக்கு ஏலம் போனது. மதம் மற்றும் அறிவியலுக்கு இடையேயான விவாதப்பொருளை மையப்படுத்தி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதமே ” God Letter”.

einstein

ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றார். அறிவிலிய மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் மற்றும் அறிவியலுகு இடையிலான விவாதப்பொருளை மையப்படுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம் 1954ம் ஆண்டு அறிவியவில் விஞ்ஞானி எரிக் குட்கிண்ட் என்பவருக்கு எழுதியுள்ளார். இந்த கடிதம் God Letter என அழைக்கப்படுகிறது.

கடிதம் எழுதி ஓராண்டுகள் கடந்த நிலையில் ஐன்ஸ்டீன் மரணமடைந்தர். இதையடுத்து அவர் எழுதிய அந்த கடிதம் தற்போது நியூயார்கில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. கடவுளின் கடிதம் என அழைக்கப்பட்ட ஐன்ஸ்டீனின் கடிதத்தை வாங்க கடும் போட்டி நிலவியது. அதன் காரணமாக சுமார் ரூ.19.74 லட்சத்திற்கு அந்த கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டது. ஐன்ஸ்டீனின் இந்த கடிதம் ரூ.7 கோடிக்கு மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 கோடி வரை ஏலம் போனது மகிழ்ச்சி அளிப்பதாக கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.