Random image

மதுரையில் மதுபோதையில் சாலையில் சென்ற பெண்களிடம் சில்மிஷம் செய்தவர் கைது!  வைரல் வீடியோ

மதுரை:

துரை கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பொன்னகரம் பகுதியில் உள்ள தமிழன் தெருவில் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் சாலையில் செல்லும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்,

அப்போது அதே பகுதியில் உள்ள பலர் அவரை தடுக்க முயற்சி செய்தார்கள் அவரை தட்டிக்கேட்ட பெண்ணொரு வரை போதை ஆசாமி ஓங்கி மிதித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்து படுகாயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் போதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது அவர் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜய் பாபு என்பது தெரியவந்துள்ளது,

பள்ளி அருகே மதுபோதையில் அரை நிவாரணமாக பொதுமக்களிடம் அட்டூழியத்தை ஈடுபட்டபோது எடுக்கபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

– பொதிகை குமார்